நாளை வாக்கு எண்ணிக்கை: டெல்லியில் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை !

  டேவிட்   | Last Modified : 22 May, 2019 12:42 pm
new-24-hours-control-room-by-eci

17-வது மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ள நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏதேனும் கண்டறியப்பட்டால் இது குறித்து உடனடி தகவல் கொடுக்க டெல்லியில் புதிதாக கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 

542 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது.  நாடு முழுவதும் பதிவான வாக்குகள் அனைத்தும், வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள நிலையில் நாளை (மே 23ஆம்) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது.  இதனிடையே, வாக்கு எண்ணிக்கையின்போது வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏதேனும் ஏற்பட்டால் அது குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்க டெல்லியில் 24 மணிநேரமும் இயங்கக்கூடிய கட்டுபாட்டு அறை ஒன்று திறக்கப்பட்டுள்ளது.  மேலும், கோளாறுகள் குறித்து 011-23052123 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டும் புகார் தெரிவிக்கலாம் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close