Election Results 2019 LIVE Updates: மாபெரும் வெற்றியுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் பாஜக!

  Newstm Desk   | Last Modified : 23 May, 2019 09:29 pm
election-results-2019-live-updates

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. இதற்கான வாக்கு எண்ணிக்கை பணிகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

 

20.00: இந்தியாவின் மூலை முடுக்கில் உள்ள மக்கள் அனைவரும் பாஜகவிற்கு ஆதரவு வழங்கியுள்ளனர்; கடும் வெயிலிலும் மக்கள் வாக்களித்துள்ளனர்; இந்திய ஜனநாயக திருவிழாவை உலக நாடுகள் வியந்து பார்க்கின்றன

ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது; மக்கள் வெற்றி பெற்றுள்ளனர்; இந்த வெற்றியை மக்களின் காலடியில் சமர்ப்பிக்கிறேன் - பாஜக தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு

தும்கூர் தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் தேவகவுடா தோல்வி அடைந்தார்.  

19.30: கடந்த 5 ஆண்டுகளில் மோடியின் சிறப்பான ஆட்சிக்கு கிடைத்த வெற்றி; மோடி புயல் மக்களை சென்றடைந்துள்ளது - பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பெருமிதம். 

17 மாநிலங்களில் 50%-க்கும் மேல் வாக்குகளை பெற்றுள்ளது பாஜக. சாதி, மதங்களை கடந்து பாஜகவுக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். நாட்டில் குடும்ப ஆட்சிக்கு இனி இடமில்லை.. இந்த வெற்றியின் கதாநாயகன் பிரதமர் மோடியே; இந்த வெற்றி பிரதமர் மோடியில் புகழால் சாத்தியமாகியுள்ளது. 50 ஆண்டு கால வரலாற்றில் எவரும் பெறாத மிக பெரிய வெற்றியை பா.ஜ.க பெற்றுள்ளது. இந்த வெற்றிக்காக உழைத்த தொண்டர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி- டெல்லி பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் அமித்ஷா பேச்சு

அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார். 

19.00: டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு பிரதமர் மோடி வருகை.. பாஜக தேசிய தலைவர் அமித் ஷா வாசலில் நின்று வரவேற்றார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் உற்சாக வரவேற்பு. 

பாஜக கூட்டணி - 350 ; காங்கிரஸ் கூட்டணி - 91, மற்றவை - 101 இடங்களில் முன்னிலை 

18.30: மத்திய இணை அமைச்சராக பதவி வகித்து வரும் ஜெனரல் வி.கே.சிங், காசியாபாத் தொகுதியில் 3 லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிப்பு. 

மக்கள் தீர்ப்புக்குத் தலைவணங்குகிறோம்; தேர்தல் அரசியலில் வெற்றி-தோல்வி என்பது இயல்பானது - டிடிவி தினகரன் ட்வீட் 

 

பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ஆகியோர் வாழ்த்து. 

நெல்லை, கள்ளக்குறிச்சி, பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றதாக அறிவிப்பு 

18.15: ஆந்திராவில் 6 மாதத்தில் இருந்து ஓராண்டிற்குள் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.  

18.20: தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து 'சவுகிதார்' என்ற வார்த்தை நீக்கினார் மோடி. 

கடந்த இரண்டு மாதங்களாக 'மக்களின் காவலாளி' என்று பொருள்படக்கூறிய  'சவுகிதார்' என்ற வார்த்தையை தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து பிரதமர் மோடி நீக்கியுள்ளார். மேலும், பாஜக தொண்டர்களையும் நீக்கும்படி கூறியுள்ளார்.  பெயரை நீக்கினாலும், 'சவுக்கிதார்' என்ற உணர்வுடன் மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்ற வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.  

 

18.00:  மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்த மக்கள் அனைவருக்கும் நன்றி; எங்களது மீது உள்ள நம்பிக்கையை நாங்கள் என்றும் காப்போம். தமிழக மக்களின் உரிமைக்காக நாங்கள் என்றுமே குரல் கொடுப்போம்.  பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள்- மு.க.ஸ்டாலின்

அண்ணா அறிவாலயத்திற்கு ஸ்டாலின் வருகை; தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..

17.42: அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை பின்னுக்கு தள்ளி ஸ்மிரிதி இரானி தொடர்ந்து முன்னிலை; தற்போது 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். 

மக்களவைத் தேர்தல் தோல்வியை கண்டு துவண்டு விட வேண்டாம்; மீண்டு வருவோம்; வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள்; அமேதி தொகுதியில் என்னை தோற்கடித்த ஸ்மிரிதி இரானிக்கும் நன்றி. மக்கள் தீர்ப்பு அழித்துவிட்டார்கள். அதுகுறித்து பேச விரும்பவில்லை - ராகுல் காந்தி பேட்டி

17.15: சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் மீண்டும் முன்னிலை.. தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து பின்னடைவு..

17.00: தமிழக மக்கள் தவறு செய்துவிட்டார்கள்; நாங்கள் எந்த ஊழலும் செய்யவில்லை; தமிழக மக்கள் மீது எந்த கோபமும் இல்லை; தேர்தலில் தோற்றாலும் மக்கள் பணி தொடரும்; வாக்களிக்காத மக்கள் ஏன் வாக்களிக்கவில்லை என்பதை விரைவில் உணர்வார்கள்; அதற்காக வருந்துவார்கள் -தமிழிசை

16.30: சென்னை ராணி மேரி கல்லூரியில் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. வாக்கு இயந்திரங்கள் மாற்றப்பட்டதாக கூறி அதிமுக முகவர்கள் வாக்குவாதம்.

தமிழகம் திராவிட இயக்கத்தின் கோட்டை என்பதை பறைசாற்றிய தமிழக மக்களுக்கு நன்றி - வைகோ கருத்து

வயநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெற்றி பெற்றதாக தகவல். 

பாஜக வெற்றிக்கு இந்துத்துவாவே காரணம் - பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி

16.00: பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு பாஜக மூத்த தலைவர் அத்வானி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

நீலகிரி தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ. ராசா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை. 

ஒடிசாவில் பி.ஜே .டி 110 தொகுதிகளில் முன்னிலை; ஒடிசா முதல்வராக 5வது முறையாக நவீன் பட்நாயக் தலைமையில் ஆட்சி அமைகிறது. 

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கும், ஆந்திராவில் ஆட்சியமைக்க போகும் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் பிரதமர் மோடி வாழ்த்து 

15.40: அத்வானியின் சாதனையை முறியடித்த அமித் ஷா! 

குஜராத் காந்திநகர் தொகுதியில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் வேட்பாளர் சி.ஜே.சவுதாவை விட 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.  2014 தேர்தலில் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்ட அத்வானி 4.83 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றதே சாதனையாக இருந்தது. இந்நிலையில், 2019 தேர்தலில் அத்வானியின் சாதனையை அமித் ஷா முறியடித்துள்ளார்.

கன்னூஜ் தொகுதியில் சமாஜ்வாதி அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் 6,000 வாக்குகள் பின்னடைவு. 

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா வருகை. 

நேபாள் பிரதமர் கே.பி.ஷர்மா ஓலி, பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். 

சண்டிகர், தாத்ரா நகர் ஹாவேலி, லட்சத்தீவு, அந்தமான் நிக்கோபார்,  டையூ டாமன்- தலா ஒரு தொகுதி கொண்டமேற்கண்ட தொகுதிகளில் பாஜக முன்னிலை 

ஒடிஷாவில்(21)  பிஜேடி - 14, பாஜக - 7 தொகுதிகளில் முன்னிலை

15.30: தேர்தலில் வெற்றி அடைந்தவர்களுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்து! 

வெற்றி அடைந்தவர்களுக்கு வாழ்த்துக்கள்; தேர்தலில் தோற்றவர்கள் எல்லாம் உண்மையில் தோற்றவர்கள் அல்ல; தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்து கருத்துக்களை உங்களிடம் பகிர்வோம். வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் விவிபேட் இயந்திரங்களில் உள்ள ஒப்புகை சீட்டுகளை ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும்- மமதா பானர்ஜி ட்வீட்

மேற்கு வங்கம் முன்னிலை: திரிணமூல் காங்கிரஸ் - 22 பாஜக -19 காங்கிரஸ் -1 

 

 

15.15: வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமற்ற தகவல்..

அசாம் சட்டப்பேரவை தேர்தல்:  பாஜக -11; காங்கிரஸ் - 0 மற்றவை - 0 

ஹிமாச்சல் பிரதேசம் - பாஜக 4 இடங்களிலும் முன்னிலை. 

அமித் ஷா 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.

15.00: தமிழக சட்டப்பேரவை தொகுதிகள்(22) முன்னிலை -> திமுக - 13; அதிமுக -09; மற்றவை -00 ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் விஸ்வநாதன் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தகவல்.

ராஜீவ் காந்தி, வாஜ்பாய் வெற்றி பெற்ற போது வாராத சந்தேகம் பிரதமர் மோடி வெற்றியின் போது வருகிறதா? - சரத் பவார் கேள்வி.. 

ரஷ்ய அதிபர் புதின், ஆப்கானிஸ்தான் பிரதமர் அஷ்ரப் கனி, சீன பிரதமர் ஜி ஜின்பிங், பூடான் மன்னர் ஆகியோர் பிரதமர் மோடிக்கு வாழ்த்து..

14.50: அனைவரும் ஒன்றிணைந்து வலிமையான இந்தியாவை உருவாக்குவோம். இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது - பிரதமர் மோடி ட்வீட். 

 

14.30: பிரதமர் மோடிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து. 

தருமபுரி தொகுதி வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பின்னடைவு; திமுக வேட்பாளர் செந்தில் குமார் முன்னிலை

பாஜக முன்னிலை: நாட்டு மக்களுக்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நன்றி தெரிவித்தார். 

 

14.00: பாஜகவுடன் கூட்டணிக்கு தயார் என மதசார்பற்ற ஜனதா தளம் அறிவித்துள்ளது. இதையடுத்து கர்நாடகாவில் ஆட்சி மாறும் நிலைமை உருவாகியுள்ளது.  கர்நாடகாவில் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது மதச்சார்பற்ற ஜனதா தளம், பாஜகவுக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் பாஜக - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியில் ஆட்சி உருவாக வாய்ப்புள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக முன்னிலை. ஒட்டுமொத்தமாக பாஜக 301 இடங்களில் தனித்து முன்னிலை. பீகாரில் 40 இடங்களில் 38 இடங்களில் பாஜக முன்னிலை.

இதயபூர்வமான வாழ்த்துக்கள் : பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து. 

காங்கிரஸ் கட்சி தனித்து 52 இடங்களில் மட்டுமே முன்னிலை. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற 55 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

13.40: 340க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக முன்னிலை; பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நீதன்யாகுவும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து.. 

13.30: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பிரதமர் மோடி மற்றும்ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

13.20: உத்திரபிரதேச மாநிலம் அமேதி தொகுதி 1998ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் வசம் இருந்து வருகிறது. கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிட்டு வருகிறார். கடந்த முறை 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் மற்றும் ஸ்மிரிதி இரானி இடையே கடும் போட்டி நிலவியது.  ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலேயே ராகுல் காந்தி வெற்றியடைந்தார்.

இதையடுத்து 2019 தேர்தலில் இன்றைய வாக்கு எண்ணிக்கையில் காலை முதலே ஸ்மிரிதி இரானி முன்னிலையில் இருந்து வருகிறார். இதையடுத்து அமேதி தொகுதி, காங்கிரஸ் கையை விட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

13.10: ஆந்திர சட்டப்பேரவை தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 144 தொகுதிகளிலும், தெலுங்கு தேசம் கட்சி 29 தொகுதிகளிலும், பாஜக ஒரு தொகுதியிலும் முன்னிலை. தெலுங்கு தேசம் கடும் பின்னடைவை சந்தித்துள்ளதையடுத்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்கிறார். 

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராக வருகிற 30ம் தேதி பதவியேற்கிறார். 

13.00: தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 22 தொகுதிகளில் திமுக 13 இடங்களிலும், அதிமுக 9 இடங்களிலும் முன்னிலையில் இருந்து வருகிறது. 

பாஜக 330க்கும் அதிகமான இடங்களில் முன்னிலையில் இருப்பதையடுத்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

பாஜக முன்னிலை: நாளை அமைச்சரவை கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு.. 

12.50: ஒரு நாடாளுமன்ற தொகுதியில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் இருக்கும் நிலையில், இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு எண்ணிக்கையானது முடிவடைந்துள்ளது, அதன்படி, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஹரியானா, பீகார் ஆகிய மாநிலங்களில் பெரும்பாலான தொகுதிகளில் பாஜக முன்னிலையில் இருந்து வருகிறது. இது தேர்தல் முடிவை ஓரளவு கணிப்பதாக உள்ளது. 

மகாராஷ்டிரா சஸாரா தொகுதியில் முன்னாள் மக்களவை சபாநாயகர் மீரா குமார் பின்னடைவு..

12.30: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆந்திர சட்டப்பேரவை தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 150 தொகுதிகளிலும், தெலுங்கு தேசம் கட்சி 25 தொகுதிகளிலும் முன்னிலை. 

ஹரியானா பாஜக- 8; காங்கிரஸ் -2 இடங்களில் முன்னிலை 

12.25: சிதம்பரம் தொகுதியில் விசிக திருமாவளவனை பின்னுக்குத்தள்ளி அதிமுக வேட்பாளர் முன்னிலை; 

கடந்த முறை பாஜக 336 தொகுதிகளில் வென்றதை விட தற்போது அதிக தொகுதிகளில் பாஜக முன்னிலை..

வாக்கு எண்ணிக்கை முன்னிலையில் பாஜக, காங்கிரஸ், திரிணமூல்காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து திமுக 5ம் இடத்தில் உள்ளது.

கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும், அம்மாநில பாஜக தலைவருமான எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா, ஷிவ்மோகா தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிப்பு..

பாஜக கூட்டணி - 344 காங்கிரஸ் கூட்டணி - 89  மற்றவை -109;   தமிழகம்-> திமுக -37 அதிமுக -02 மற்றவை - 00

12.10: பெரம்பூர் தொகுதிக்கான நான்காம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்ட நிலையில், ராணி மேரி கல்லூரியில் உள்ள செய்தியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒடிசா சட்டப்பேரவை தேர்தலில் நவீன் பட்நாயக் கட்சி 78 இடங்களில் முன்னிலை; பாஜக 26 இடங்களில் முன்னிலை

11.55: பாஜக முன்னிலை: நடிகர் சரத்குமார் பிரதமர் மோடிக்கு வாழ்த்து.. 

தருமபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸை பின்னுக்குத்தள்ளி திமுக வேட்பாளர் செந்தில் குமார் முன்னிலையில் உள்ளார். 

11.45: பாஜக கூட்டணி 338 இடங்களில் முன்னிலை; பாஜக தனித்து 284 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. ஆட்சி அமைக்க பெரும்பான்மை இடங்கள் 273 என்பது குறிப்பிடத்தக்கது. 

மகாராஷ்டிராவில் 40 தொகுதிகளில் பாஜக முன்னிலை; காங்கிரஸ் ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. அதேபோன்று உத்திரபிரதேசத்தில் 25 தொகுதிகளில் பாஜக முன்னிலை; காங்கிரஸ் -2 

அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை முந்தி ஸ்மிரிதி இரானி முன்னிலை;  பாஜக எம்பி ஹேமமாலினி 28,500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை; 

ஒடிசாவில் காங்கிரஸ் இன்னும் ஒரு இடத்தில் கூட முன்னிலையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

11.40: பாஜக கூட்டணி - 332 காங்கிரஸ் கூட்டணி - 101 மற்றவை -109;   தமிழகம்-> திமுக -37 அதிமுக -02 மற்றவை - 00

11.30: ஆந்திர சட்டப்பேரவை தொகுதியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 142 தொகுதிகளிலும், தெலுங்கு தேசம் கட்சி 28 தொகுதிகளிலும் முன்னிலை

மக்களவைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 24 தொகுதிகளிலும், தெலுங்கு தேசம் கட்சி 1 தொகுதியிலும் முன்னிலை. இது தெலுங்கு தேசம் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

11.20: திருவனந்தபுரத்தில் சஷி தரூர் முன்னிலை; அருணாச்சல பிரதேசம் பாஜகவின் கிரண் ரிஜிஜூ முன்னிலை; அருணாச்சலில் 2 தொகுதிகளிலும் பாஜக முன்னிலை 

பீகார் பாட்னா தொகுதியில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், சத்ருகன் சின்ஹாவை விட 40,00 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை; 

பாஜக தொடர்ந்து முன்னிலையில் இருப்பதையடுத்து, பிரதமர் மோடியின் தாயார் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

11.15: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் தொகுதியில் மெஹபூபா முப்தி பின்னடைவு; காங்கிரஸின் ஜோதிராதித்யா சிந்தியா 18,000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு. 

பாஜக - ராதா மோகன் சிங், பிஹார் பூர்வி சம்பாரன்தொகுதியில் முன்னிலையில் உள்ளார். 

11.00: தமிழக சட்டப்பேரவை தொகுதிகள்(22) முன்னிலை -> திமுக - 11; அதிமுக -11; மற்றவை -00 

பாஜக முன்னிலையில் இருப்பதையடுத்து, மத்திய அமைச்சர் சுஷிமா சுவராஜ், பிரதமர் மோடிக்கு வாழ்த்து.

பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு டெல்லி பாஜக தலையமகத்திற்கு வருகிறார். 

10.50: டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளிலும் பாஜக முன்னிலை

பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் 41,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் முதல்முறையாக 40,000 புள்ளிகளை கடந்து சாதனை 

ஷீலா தீக்ஷித்தை விட மனோஜ் திவாரி 42,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை 

ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை 

10.40:  பாஜக கூட்டணி - 334 காங்கிரஸ் கூட்டணி - 103 மற்றவை -102;   தமிழகம்-> திமுக -37 அதிமுக -02 மற்றவை - 00

தமிழக சட்டப்பேரவை தொகுதிகள்(22) முன்னிலை -> திமுக - 12; அதிமுக -10; மற்றவை -0 

பாஜக 300க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருவதையொட்டி, பல்வேறு இடங்களில் பாஜக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

10.30: மும்பையில் மொத்தமுள்ள 6 தொகுதிகளிலும் பாஜக முன்னிலையில் உள்ளது. 

ராம்பூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அசாம் கான் முன்னிலை; பாஜக வேட்பாளர் ஜெயப்பிரதா பின்னடைவு

சுல்தான்பூரில் வருண் காந்தி முன்னிலை; மேனகா காந்தி பின்னடைவு

10.20: குஜராத் காந்திநகரில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா 1, 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். 

 அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பின்னடைவு

 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி தேனி, தருமபுரி ஆகிய 2 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் இருந்து வருகிறது. 

தமிழக சட்டப்பேரவை தொகுதிகள்(22) முன்னிலை -> திமுக - 11; அதிமுக -11; மற்றவை -0 

9.50: வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். சமாஜ்வாதி கட்சியின் ஷாலினி யாதவ் இரண்டாம் இடத்தில் உள்ளார். 

 பாஜக கூட்டணி - 328 காங்கிரஸ் கூட்டணி - 103 மற்றவை -102;   தமிழகம்: திமுக -37 அதிமுக -02 மற்றவை - 00

9.40: தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளில் 35 இடங்களில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக 3 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 

 பாஜக கூட்டணி - 305 காங்கிரஸ் கூட்டணி - 117 மற்றவை -96;   

9.30: தமிழக சட்டப்பேரவை தொகுதிகள்(22) முன்னிலை -> திமுக - 10; அதிமுக -06; மற்றவை 

9.25: முன்னிலை: பாஜக கூட்டணி - 301  காங்கிரஸ் கூட்டணி - 106 மற்றவை - 80;   

தமிழகத்தில் முன்னிலை: திமுக -31; அதிமுக -04 மற்றவை - 0

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் முன்னிலை

9.10 : தேனியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் பின்னடைவு; திமுக வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை

9.00 : முன்னிலை: பாஜக கூட்டணி - 218 காங்கிரஸ் கூட்டணி - 65 மற்றவை - 66; 

சிதம்பரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் முன்னிலை; தேனி மக்களவை தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் முன்னிலை 

முன்னிலை: திமுக -23; அதிமுக - 4; மற்றவை -0

8.54:  முன்னிலை: பாஜக கூட்டணி - 188 காங்கிரஸ் கூட்டணி - 59 மற்றவை - 64; 

தமிழகத்தில் திமுக 21 இடங்களில் முன்னிலை; அதிமுக 2 இடத்தில் முன்னிலை;  நெல்லை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், திருச்சி, பெரம்பலூர், திருவாரூர், தூத்துக்குடி, காஞ்சிபுரம், நாமக்கல், ஸ்ரீபெரும்புதூர், சிவகங்கை, ஆரணி, தென்காசி, மத்திய சென்னை, தஞ்சை, சேலம், திண்டுக்கல், புதுச்சேரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் திமுக முன்னிலை

திருப்பூர் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் முன்னிலை; கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர்                        சி.பி.ராதாகிருஷ்ணன் முன்னிலை 

8.50 : முன்னிலை: பாஜக கூட்டணி - 148     காங்கிரஸ் கூட்டணி - 57   மற்றவை - 35; 

          தமிழகத்தில் திமுக 16 இடங்களில் முன்னிலை; அதிமுக 1 இடத்தில் முன்னிலை

8.45 : தமிழகத்தில் திமுக 9 இடங்களில் முன்னிலை

8.40 : முன்னிலை விபரங்கள்: பாஜக கூட்டணி - 112     காங்கிரஸ் கூட்டணி - 38   மற்றவை - 35

8.35: தென் சென்னை மக்களவைத் தொகுதியில் அரை மணி நேரம் ஆகியும் வாக்கு எண்ணிக்கை பணிகள் தொடங்கவில்லை. 

8.30: குஜராத், கர்நாடகம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக முன்னிலையில் இருந்து வருகிறது.                                                    

8.20: பாஜக 39  இடங்களில் முன்னிலை; காங்கிரஸ் கூட்டணி 9 இடங்களில் முன்னிலை; மற்ற கட்சிகள் 4 இடங்களில் முன்னிலை.

8.15: பாஜக 28 இடங்களில் முன்னிலை; காங்கிரஸ் கூட்டணி 6 இடங்களில் முன்னிலை; மற்ற கட்சிகள் 2 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. 

8.00 : மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஒரு நாடாளுமன்றத் தொகுதிகளில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளில் ஒரு தொகுதியில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 

8.58: சட்டப்பேரவையில் அதிமுகவின் பெரும்பான்மையை உறுதி செய்த வாக்காளர்களுக்கு நன்றி. அதிமுக அரசு தொடரவும், அடிப்படை வாக்கு வங்கியை நிலைநாட்டிய தமிழக வாக்காளர்களுக்கு நன்றி - ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிக்கை 

9.25: 'மக்களவை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற திமுக தலைவர், மதிப்பிற்குரிய நண்பர் ஸ்டாலினுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்': நடிகர் ரஜினிகாந்த் ட்வீட் 

7.00: 17வது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளில், வேலூர் தவிர 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவானது நடைபெற்று முடிவடைந்துள்ளது. 

மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரப் பிரதேசம், அருணாச்சல பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய நான்கு மாநில சட்டசபை தேர்தலும் நடந்துள்ளது. உலகிலேயே அதிக மக்களைக் கொண்ட இரண்டாவது பெரிய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. அந்த வகையில் இந்தத் தேர்தல் மிகப் பெரிய ஜனநாயக திருவிழாவாகவே உலக நாடுகள் மத்தியில் பார்க்கப்படுகிறது. எனவே, இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவும் இன்று தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கியுள்ளன. 

தமிழகத்தைப் பொறுத்தவரையில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் உள்ள 38 மக்களவைத் தொகுதிகளுக்கும் பொதுத்தேர்தல் மற்றும் காலியாக இருந்த 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. தொடர்ந்து திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய  4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. மொத்தமாக தமிழகத்தில் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்து இன்று அதற்கான முடிவுகள் வெளியாக இருக்கின்றன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close