குஜராத்தை மீண்டும் அப்படியே அள்ளியது பா.ஜ.,

  விசேஷா   | Last Modified : 23 May, 2019 12:01 pm
bjp-clean-sweep-in-gujarat

குஜராத் மாநிலத்தில் மாெத்தமுள்ள, 26 மக்களவை தொகுதிகளில், அனைத்து இடங்களிலும், பா.ஜ.,வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். கடந்த, 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலிலும், குஜராத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ., வெற்றி பெற்ற நிலையில், மீண்டும் கிளீன் ஸ்வீப் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்த மாநிலத்தில், எப்படியும், 10 இடங்களிலாவது வென்றுவிடலாம் என எண்ணிய காங்கிரசுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. சமீபத்தில் அந்த மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், குறிப்படத்தக்க இடங்களில் வெற்றி பெற்று பலமான எதிர்க்கட்சியாக உருவான காங்கிரஸ் கட்சி, இந்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close