ஒடிசா சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் நவீன்பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் மீண்டும் ஆட்சியை பிடிக்கவுள்ளது. மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் பெரும்பான்மை பெற 74 இடங்களில் வெற்றி பெற வேண்டும். பிஜூ ஜனதா தளம் 100 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் அங்கு மீண்டும் பிஜூ ஜனதா தளம் ஆட்சி அமைக்கவுள்ளது. அங்கு பாஜக 26 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
newstm.in