பாஜகவுடன் கூட்டணிக்கு தயார்: மதசார்பற்ற ஜனதா தளம் பகிரங்க அழைப்பு

  முத்து   | Last Modified : 23 May, 2019 04:23 pm
ready-for-a-coalition-with-bjp-secular-janata-party-announcement

கர்நாடக மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணிக்கு தயார் என, ஆளும் மதசார்பற்ற ஜனதா தள கட்சி பகிர அறிவித்துள்ளது. 

கர்நாடகாவில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் 80 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதனால் ஆட்சியமைக்க இழுபறி ஏற்பட்ட நிலையில், 37 இடங்களை மட்டுமே வென்ற மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் காங்கிரஸ் கைகோர்த்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் பாஜக 24 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி வெறும் 3 இடங்களிலேயே முன்னிலை வகிக்கிறது. 

இதையடுத்து, கர்நாடக மாநிலத்தில் ஆட்சி மாறும் நிலைமை உருவாகியுள்ளது. இதுதொடர்பாக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர் தேவகவுடா, முதல்வர் குமாரசாமி ஆகியோர் பெங்களூரு இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close