தமிழகத்தில் அபார வெற்றி பெற்ற திமுக கூட்டணி!

  Newstm Desk   | Last Modified : 24 May, 2019 11:39 am
election-results-2019-dmk-wins-38-seats-out-of-39

மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் ஆளும் அதிமுக கூட்டணிக்கும், திமுக கூட்டணிக்கும் வெற்றி வாய்ப்பு ஏறக்குறைய சரிசமமாக இருக்கும் என, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருந்தன. அதாவது, திமுக கூட்டணி 21 தொகுதிகள் வரையும், அதிமுக கூட்டணி 17 தொகுதிகள் வரையிலும் வெற்றிப்பெறும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறியிருந்தன.

இக்கருத்துக்கணிப்புகளுக்கு நேர்மாறாக,  ஆளும் அதிமுக கூட்டணி ஒரு தொகுதிகளில் மட்டும் முன்னிலை வகித்து வருகிறது. புதுச்சேரி சேர்த்து மீதமுள்ள 38 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது.

திமுகவின்  கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறன் உள்ளிட்ட  முக்கிய வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தனர். 

இறுதியாக தேர்தல் முடிவுகளின் படி, திமுக கூட்டணி மொத்தமாக 38 தொகுதிகளில் அபார வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. தேனி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டுமே அதிமுக சார்பில் வெற்றி பெற்றுள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close