சுபிட்சத்தை நோக்கிய பயணம்: பிரதமர் மாேடிக்கு அத்வானி வாழ்த்து

  விசேஷா   | Last Modified : 23 May, 2019 05:30 pm
advani-wishes-to-modi-for-elctoral-win

மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை இடங்களில் முன்னிலை வகிப்பதை அடுத்து, பிரதமர் நரேந்திர மாேடி மற்றும் கட்சித் தலைவர் அமித் ஷா ஆகியோருக்கு, கட்சியின் மூத்த தலைவர் அத்வானி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அவர் தன் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: ‛‛பிரதமர் நரேந்திர மாேடியின் தலைமையில், அமித் ஷாவின் வழிகாட்டுதலில் இந்த தேர்தலில் பா.ஜ., மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. நாட்டு மக்கள் ஒவ்வொருவரிடமும் பா.ஜ.,வின் கொள்கைகளை கொண்டு சேர்த்ததில் அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 

இந்த வெற்றி, ஒவ்வொரு கட்சித் தொண்டனுக்குமானது. அனைவரும் இணைந்து மாபெரும் வெற்றியை பெற்றுத் தந்துள்ளனர். பிரதமர் மாேடி மற்றும் அமித் ஷாவுக்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். பிரதமர் மாேடியின் தலைமையில், நாடு, சுபிட்சமான எதிர்காலத்தை நாேக்கிய பயணத்தை தொடர உள்ளது’’ என அவர் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close