வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாரடைப்பால் காங்., தலைவர் மரணம்

  Newstm Desk   | Last Modified : 23 May, 2019 05:31 pm
congress-leader-dies-after-massive-heart-attack

மத்திய பிரதேசத்தில், வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்த காங்கிரஸ் தலைவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில், அவர் உயிரிழந்தார். 

மத்திய பிரதேச மாநிலம் ஷெஹோரே மாவட்டத்தை சேர்ந்தவர் ரதன் சிங் தாக்குர். அங்குள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில், அமர்ந்திருந்தார். அப்போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்தார். அதிர்ச்சி அடைந்த தொண்டர்கள், அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் கூறியதால், தொண்டர்கள் சாேகத்தில் ஆழ்ந்தனர். அவரின் மறைவுக்கு முதல்வர் கமல்நாத், முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close