மக்களவைத் தேர்தல் வெற்றியையடைத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், " நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி, வளம் மற்றும் வளர்ச்சிக்கு இந்தியாவுடன் இணைந்து செயல்பட பாகிஸ்தான் விரும்புகிறது" என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
newstm.in