தெலுகு தேசத்தை தெறிக்கவிட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்!

  Newstm Desk   | Last Modified : 23 May, 2019 07:07 pm
election2019-andhra-pradesh-ysr-congress

ஆந்திர மாநிலத்தில் ஆளும் தெலுகு தேசம் கட்சி, மக்களவைத் தேர்தலில் படுதோல்வியை எதிர்நோக்கியுள்ளது. அங்கு மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில், ஆளும் தெலுகு தேசம் கட்சி வெறும் மூன்று தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

மாறாக, அந்த மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 22 தொகுதிகளில் முன்னிலை பெற்று, விஸ்வரூப வெற்றியை எதிர்நோக்கியுள்ளது.
இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 151 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தேசிய அளவில் மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியை தீவிரமாக மேற்கொண்டார். இருப்பினும், தெலுகு சேதம் கட்சி, ஆந்திர மாநிலத்தில் மூன்று எம்.பி. தொகுதிகளில் மட்டும் முன்னிலை வகிப்பதால், பிரதமராக வேண்டுமென்ற அவரின் நப்பாசை நிராசை ஆகியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close