பிரதமர் மோடிக்கு அமெரிக்கா வாழ்த்து!

  Newstm Desk   | Last Modified : 23 May, 2019 08:15 pm
usa-congratulates-prime-minister-narendra-modi

மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெறும் பாஜகவுக்கு அமெரிக்கா தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 350 இடங்களுக்கும் மேல் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இதையடுத்து பல்வேறு உலக நாடுகள் பிரதமர்  நரேந்திர மோடியை வாழ்த்தியவண்ணம் உள்ளன.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென் ஜஸ்டர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அபார வெற்றிக்காக பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இருதரப்பு நல்லுறவு தொடர்ந்து மேம்படுத்த அமெரிக்கா ஆவல் கொண்டுள்ளது" என்று கென் ஜஸ்டர் தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

newstm.in

 

 

 

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close