முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் சந்திரபாபு நாயுடு

  Newstm Desk   | Last Modified : 23 May, 2019 08:19 pm
chandrababu-naidu-resigns-as-cm

தேர்தல் தோல்வி எதிரொலியால் ஆந்திர மாநில முதல்வர் பதவியை சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்தார். 

ஆந்திராவில் மொத்தமுள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 152 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. தெலுகு தேசம் 22 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.       

இதனால்  தெலுகு தேசம் கட்சி தோல்வியை சந்திக்கவுள்ளதால்,   சந்திரபாபு நாயுடு முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அம்மாநில ஆளுநரிடம், சந்திரபாபு நாயுடு தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
                                                                                                                  
வெற்றி பெறவுள்ள ஜெகன்மோகன் ரெட்டி வரும் 30-ஆம் தேதி ஆந்திர மாநில முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.                                                                                                                                                                                                                                                                                              

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close