ஆந்திராவில் ஓராண்டிற்குள் பெரிய மாற்றம்: ஜெகன்மோகன் ரெட்டி

  Newstm Desk   | Last Modified : 23 May, 2019 09:03 pm
big-change-in-one-year-in-andhra-jaganmohan-reddy

ஆந்திராவில் ஓராண்டிற்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் மொத்தமுள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 152 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. தெலுகு தேசம் 22 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் ஜெகன்மோகன் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து ஜெகன்மோகன் ரெட்டி கூறுகையில், ‘ஆந்திராவில் 6 மாதத்தில் இருந்து ஓராண்டிற்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம். நாங்கள் பெற்ற வெற்றி மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது’ என்று தெரிவித்துள்ளார். 

ஜெகன்மோகன் ரெட்டி வரும் 30-ஆம் தேதி ஆந்திர மாநில முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.            

 

newstm.in                                                                                                                                                                                                                                                                                  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close