இது சாதாரண குடிமகனின் வெற்றி: பிரதமர் மோடி பெருமிதம்

  விசேஷா   | Last Modified : 23 May, 2019 08:54 pm
this-victory-is-odrinary-man-s-victory-pm-modi

தேர்தல் வெற்றிக்கு பின், பாஜக தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது: 

''இந்த வெற்றி மாேடியின் வெற்றி அல்ல. சாதாரண குடிமகனின் வெற்றி. வியர்வை சிந்தி உழைத்து, நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காக, பங்களித்தவர்களின் வெற்றி. தங்கள் பசியையும் பொருட்படுத்தாமல், தேச முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர்களின் வெற்றி. 

உழைப்பாளர்கள் நலன் குறித்து வாய் கிழிய பேசும் இடதுசாரிகள், இதுவரை அவர்களுக்காக எதையும் செய்ததில்லை. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்த பா.ஜ., அரசு, 40 கோடி தொழிலாளர்களுக்கு பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது, 

இது, மத்திய வர்க்க குடும்பத்தினரின் வெற்றி. அவர்களுக்கு தேவையானதைப் பற்றிய, யாரும் இதுவரை யாேசித்ததில்லை. ஆனால், பா.ஜ., தலைமையிலான அரசு அதை செய்தது. அவர்கள் அளித்த வெற்றி, அவர்களின் வெற்றி தான் இது. மதசார்பற்றவர்கள் ஒன்று சேருங்கள் என கூச்சலிட்டவர்கள், மக்களை முட்டாளாக்க நினைத்தனர். ஆனால் அது எதுவும் நடக்கவில்லை. மக்கள் சரியான நேரத்தில் சரியான முடிவெடுத்துள்ளனர். 
2022ம் ஆண்டு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும் போது, மகாத்மா காந்தியின் 150வது ஜெயந்தி விழா கொண்டாடப்படும்''என்றார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close