350 இடங்களில் பா.ஜ., கூட்டணி வெற்றி; மீண்டும் பிரதமராகிறார் மாேடி

  விசேஷா   | Last Modified : 23 May, 2019 09:19 pm
350-seats-win-for-bjp-modi-will-become-pm-of-india-again

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலில், பாரதிய ஜனதா தலைமையிலான, தே.ஜ., கூட்டணி, 350 இடங்களில் வெற்றி பெற்று, மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. இதன் மூலம், பிரதமர் நரேந்திர மாேடி, தொடர்ந்து இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமர் ஆகிறார். 

நாட்டின், 17வது மக்களவை தேர்தல், கடந்த மாதம், 11ம் தேதி துவங்கி, இம்மாதம், 19ம் தேதி வரை நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியாகின. அதில், 350 இடங்களில், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இந்த தொகுதிகள் அனைத்திலும் வாக்கு வித்தியாசம் அதிகம் இருப்பதால், 350 தொகுதிகளிலும் தேஜ கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. 

அதே போல், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, 89 இடங்களிலும், இந்த இரு அணியிலும் இணையாத பிற கட்சிகள், 103 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. இதன் மூலம், மத்தியில், மீண்டும் பாஜ தலைமையிலான ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது. 

பிரதமர் நரேந்திர மாேடிக்கு சர்வதேச தலைவர்கள், உள்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பாரதிய ஜனதா கட்சி மட்டும் தனியாக, 300க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிப்பதால், அந்த கட்சி கடந்த முறையை விட இம்முறை, அதிக இடங்களில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. 

காங்கிரஸ் கட்சிக்கு, 51 இடங்களில் வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது தலைமையிலான கூட்டணி, மாெத்தம், 89 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது அணி, 103 இடங்களில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், மாலை செய்தியாளர்களை சந்தித்த காங்., தலைவர் ராகுல், தான் போட்டியிட்ட அமேதி தொகுதியில் வெற்றி பெற்ற பா.ஜ., வேட்பாளர் ஸ்மிருதி இரானிக்கு வாழ்த்து தெரிவித்தார். பின், பிரதமர் நரேந்திர மாேடிக்கு வாழ்த்து தெரிவித்து, தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை ஒப்புக்கொண்டார். 

மாலை, கட்சித் தலைமையகத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய அமித் ஷா மற்றும் பிரதமர் மாேடி நாட்டு மக்களுக்கும், பாஜ தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்தனர். மாேடி தலைமையிலான புதிய அரசு, வரும், 26ம் தேதி பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழகத்தில், 36 இடங்களில் திமுக கூட்டணியும், ஒரு இடத்தில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. சிதம்பரம் தொகுதியில் மட்டும் இன்னும் இழுபறி நிலை நீடிக்கிறது. 

தமிழக சட்டசபை இடைத்தேர்தலில், திமுக 12 இடங்களிலும், அதிமுக 10 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close