அகில இந்திய அளவில் மீண்டும் 3ம் இடம் பிடித்த தமிழக கட்சி

  விசேஷா   | Last Modified : 24 May, 2019 12:46 pm
dmk-becomes-the-third-biggest-party-in-loksabha

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், 23 இடங்களில் வெற்றி பெற்றுள்ள திமுக, எம்.பி.,க்கள் எண்ணிக்கையில், அகில இந்திய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. 

கடந்த, 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி, 282 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி, 44 இடங்களில் வெற்றி பெற்றாலும், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்த்து பெறுவதற்கு தேவையான, 54 எம்.பி.,க்கள் எண்ணிக்கை இல்லாததால், அந்த கட்சி அங்கீகரிக்கப்படாத பெயரளவிலான எதிர்க் கட்சியாகவே செயல்பட்டது.

தமிழகத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தேர்தலில் தனித்து களம் கண்ட அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்று, அகில இந்திய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து, அந்த கட்சிக்கு, லோக்சபா துணை சபாநாயகர் பதவி கிடைத்தது. அதிமுகவை சேர்ந்த தம்பித்துரைக்கு அந்த பதவி வழங்கப்பட்டது. 

இந்நிலையில், இந்த முறையில், 302 இடங்களில் தனித்து வெற்றி பெற்றுள்ள பா.ஜ., நாட்டின் மிகப் பெரிய கட்சி என்ற அந்தஸ்த்தை தக்க வைத்துள்ளது. 52 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, இந்த முறையும், அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பிடிக்க முடியாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்த முறை, 23 இடங்களில் வெற்றி பெற்றுள்ள திமுக அகில இந்திய அளவில் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளது. எனினும், கடந்த முறை வெற்றி பெற்ற அதிமுக மத்திய பா.ஜ., அரசுடன் இணக்கமான போக்கை கடைபிடித்ததால், மக்களவை துணை சபாநாயகர் பதவி கிடைத்தது. 

ஆனால், இம்முறை மூன்றாவது பெரிய கட்சியாக உள்ள திமுக பாஜவுடன் மாேதல் போக்கை கடைபிடிப்பதால், அந்த பதவி, பாஜ கூட்டணி கட்சிகளில் ஏதேனும் ஒன்றுக்கோ, பிஜு ஜனதாதளம், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் அல்லது காங்கிரஸ் கட்சிக்கோ வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close