மே 30ல் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராகிறார்: தொண்டர்கள் உற்சாகம்!

  விசேஷா   | Last Modified : 24 May, 2019 02:16 pm
on-may-30-leader-of-opposition-will-become-chief-minister

ஆந்திராவில் சட்டசபை மற்றும் மக்களவை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர் ஜெகன்மாேகன் ரெட்டி, வரும் 30ம் தேதி, மாநில முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். 

நாட்டின், 17 வது மக்களவை தேர்தலுடன், ஆந்திர மாநில சட்டசபை தேர்தலும் நடத்தப்பட்டது. இந்த இரு தேர்தல்களிலுமே, முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுகு தேசம் கட்சியை தோற்கடித்து, ஜெகன் மாேகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பதிவு செய்தது. 

இதையடுத்து, இதுவரை, மாநில சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெகன்மாேகன் ரெட்டி, வரும் 30ம் தேதி, ஆந்திர மாநில முதல்வராக பதவியேற்க உள்ளார். அவருடன் புதிய அமைச்சர்களும் பொறுப்பேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அந்த கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான, நடிகை ரோஜாவுக்கு மாநில அமைச்சரையில் முக்கியத்துவம் வாய்ந்த இலாகா ஒதுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது, ஜெகனின் ஆதரவாளர்கள், ஒய்.எஸ்.ஆர்.,காங்கிரஸ் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close