282 - 303... பாஜக "ரெக்கார்ட் பிரேக்"!

  Newstm Desk   | Last Modified : 24 May, 2019 05:39 pm
election2019-bjp-break-their-own-record

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 350 -க்கும் மேற்பட்ட இடங்களில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக மட்டும் 303 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் இம்முறை பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது எனவும், தொங்கு நாடாளுமன்றம் அமையவே அதிக வாய்ப்புள்ளதாகவும் தேர்தலுக்கு முந்தைய சில கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருந்தன. இக்கருத்துக்கணிப்புகளை எல்லாம் தவிடுபொடியாக்கும் விதத்தில் பாஜக மட்டும் 303 தொகுதிகளில் விஸ்வரூப வெற்றி பெற்றதுள்ளது.

இதன் மூலம், கடந்த 2014 மக்களவைத் தேர்தலில், 282 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிமைந்த தமது சொந்த சாதனையை பாஜகவே தற்போது முறியடித்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கடந்த மக்களவைத் தேர்தலில் மொத்தம் 336 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close