முடிவுக்கு வந்தது 16வது லோக்சபா

  Newstm Desk   | Last Modified : 24 May, 2019 06:16 pm
16th-lok-sabha-terminated

நாட்டின், 17வது மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, தற்போதைய அரசின் ஆயுள் காலத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், டெல்லியில், பிரதமர் நரேந்திர மாேடி தலைமையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. 

வழக்கமான நடைமுறைகளின் படி, தற்போதைய அரசு கலைக்கப்படுவதாக ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது. 17வது மக்களவை தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி தனிப் பெரும்பான்மை பலம் பெற்றுள்ளதை அடுத்து, அந்த கட்சி விரைவில் மத்தியில் ஆட்சி அமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான தீர்மான கடிதத்தை எடுத்துக் கொண்டு குடியரசுத் தலைவரை சந்திக்க பிரதமர் நரேந்திர மோடி செல்லவுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close