மக்களவையை கலைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

  Newstm Desk   | Last Modified : 25 May, 2019 02:17 pm
16th-loksabha-dimissed-by-president-ramnath-kovind

நாட்டின், 16வது மக்களவையை கலைத்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். 

நாடு முழுவதும் நடைபெற்ற 17வது மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில், பா.ஜ., கூட்டணி, 350க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று, மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. 

இந்நிலையில், மத்திய புதிய அரசு பொறுப்பேற்க வசதியாக, 16வது மக்களவையை கலைப்பதற்கான தீர்மானம், பிரதமர் நரேந்திர மாேடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம், ஜனாதிபதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. 

இதை ஏற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 16வது மக்களவையை கலைத்து இன்று உத்தரவிட்டுள்ளர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close