வெற்றி வேட்பாளர்கள் பட்டியல் ஜனாதிபதியிடம் சமர்பிப்பு

  Newstm Desk   | Last Modified : 25 May, 2019 02:17 pm
chief-election-commissioner-sunil-arora-submits-the-list-of-winners-of-loksabha-elections-2019

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பட்டியலை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று நேரில் சந்தித்தார். 

நாட்டின், 17வது மக்களவை தேர்தலில், நாடு முழுவதும் உள்ள, 542 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பட்டியலை, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சுனில் அரோரா, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் இன்று நேரில் சமர்ப்பித்தார். 

இதையடுத்து, அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி, மத்தியில் மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோரும். அதை ஏற்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பாரதிய ஜனதாவை ஆட்சி அமைக்கும் படி அழைப்பு விடுப்பார். அதை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மாேடி தலைமையில், மீண்டும் புதிய அரசு பதவியேற்கும். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close