தேர்தலில் காங்கிரஸ் தோற்றதால் மாெட்டை போட்ட கட்சித் தொண்டர்

  Newstm Desk   | Last Modified : 25 May, 2019 03:56 pm
a-congress-worker-bl-sen-shaved-his-head-after-losing-a-bet-to-a-bjp-worker-in-rajgarh

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்து, பா.ஜ., வெற்றி பெற்றதால், தான் போட்டி சபதத்தில் தோற்றுப்போன காங்கிரஸ் கட்சி தொண்டர் ஒருவர், மாெட்டையடித்து, தன் தலை முடியை துறந்தார். 

மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கர் பகுதியை சேர்ந்தவர், பி.எல்.சென். காங்கிரஸ் கட்சியின் தீவிர ஆதரவாளரான இவர், அந்த கட்சியின் அடிப்படை உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்றும், அதன் தலைவர் ராகுல் நாட்டின் பிரதமர் ஆவார் எனவும், தன் நண்பர்களிடம் சவால் விடுத்திருந்தார். 

தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்றும் நரேந்திர மாேடி மீண்டும் பிரதமரானால், மாெட்டையடித்துக் கொண்டு, தன் தலைமுடியை துறப்பதாக கூறியிருந்தார். அதே சமயம், ராகுல் பிரதமரானால், அவரது நண்பர் மாெட்டையடிக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதித்திருந்தார். 

இந்நிலையில், மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியானதும், அதில், காங்கிரஸ் படுதோல்வி அடைந்து, பா.ஜ., பிரமாண்ட வெற்றி பெற்றதை அடுத்து, சென், பொது வெளியில், தன் நண்பர்கள் முன்னிலையில், மாெட்டையடித்துக் கொண்டு தலைமுடியை துறந்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close