நாளை பிரதமர் மோடியை சந்திக்கும் ஜெகன்மோகன் ரெட்டி

  Newstm Desk   | Last Modified : 25 May, 2019 04:45 pm
jaganmohan-reddy-meets-pm-modi-tomorrow

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

ஆந்திர மாநிலம் அமராவதியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுவினர் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், ஜெகன்மோகன் ரெட்டி சட்டமன்ற குழு தலைவராக தேர்வு  செய்யப்பட்டார். 

ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் 175 இடங்களில் 151 தொகுதிகளில் வென்ற  நிலையில், ஜெகன்மோகன் ரெட்டி, ஹைதராபாத்தில் இன்று மாலை ஆந்திர ஆளுநர் நரசிம்மனை சந்தித்து ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு உரிமை கோரவுள்ளார்.

மேலும், மே 30-ஆம் தேதி முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கவுள்ள ஜெகன்மோகன் ரெட்டி, இதற்காக நாளை டெல்லியில் பிரதமரை சந்திக்கிறார்.

2004 முதல் 2009 வரை ஒருங்கிணைந்த ஆந்திராவின் முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தை ராஜசேகர ரெட்டி பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close