டெல்லியில் பாஜக கூட்டணி ஆலோசனைக்கூட்டம் தொடங்கியது!

  Newstm Desk   | Last Modified : 25 May, 2019 05:32 pm
nda-meeting-is-about-to-begin

வருகிற 30ம் தேதி பிரதமர் மோடி பதவி ஏற்பதையடுத்து டெல்லியில் இன்று பாஜக கூட்டணி எம்.பிக்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் இந்த கூட்டமானது தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, பாஜக மூத்த தலைவர்களா அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, பாஜக மாநில முதல்வர்கள், தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக எம்.பிக்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள், கூட்டணி எம்.பிக்கள் கலந்துகொண்டுள்ளனர். 

தமிழகத்தில் அதிமுக கூட்டணி சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இதில், அதிகாரப்பூர்வமாக பிரதமர் தேர்வு, புதிய அமைச்சரவை ஆகியவை குறித்து முடிவெடுக்கப்படவுள்ளது. கூட்டணி கட்சிகளின் எம்.பிக்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுப்பது குறித்தும் முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தனிப்பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவைப்படும் நிலையில், பாஜக தனித்து 303 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது மிகப்பெரிய வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. மொத்தமாக தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை பெற்றுள்ளது. இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைகிறது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close