2019ல் அதிக பெண் எம்.பி.,க்கள்: பிரதமர் நரேந்திர மாேடி பெருமிதம்

  விசேஷா   | Last Modified : 25 May, 2019 07:25 pm
in-2019-more-women-mp-s-in-parliament-pm-modi-happy-on-that

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், இதுவரை இல்லாத அளவு, 76 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்று எம்.பி.,க்களாக தேர்வாகியிருப்பது பெருமை அளிப்பதாக பிரதமர் நரேந்திர மாேடி பேசினார். 

டெல்லி பார்லிமென்ட் வளாகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மாேடி பேசியதாவது:

சுதந்திர இந்தியாவில், இதுவரை நடைபெற்ற தேர்தல்களில், இந்த முறைதான் அதிக பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இம்முறை, 76 எம்.பி.,க்கள் மக்களவையை அலங்கரிக்க உள்ளனர். அதே போல், இம்முறை, அதிக பெண் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். அடுத்த முறை, ஆண்களை விட அதிக அளவில் பெண் வாக்காளர்கள் வாக்களிப்பர் என நம்புகிறேன். 

பெண் எம்.பி.,க்கள் அதிக அளவு தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம், நம் நாட்டில் பெண் சக்தி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது என்பது உறுதியாகியுள்ளது’’ என அவர் பேசினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close