வார்த்தை மிக முக்கியம்: எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மாேடி அறிவுரை

  Newstm Desk   | Last Modified : 25 May, 2019 07:54 pm
pm-modi-advised-to-new-coming-mp-s

டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.,க்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மாேடி பேசியதாவது: ‛‛இங்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கம் எம்.பி.,க்கள் ஒவ்வொருவரும், தங்கள் சொந்த செல்வாக்கில் வந்தவர்கள் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஜாதிய பின்னணியிலோ, தனிப்பட்ட செல்வாக்காலோ, மாேடியின் பெயராலோ இந்த வெற்றி கிடைத்துவிடவில்லை. 

மக்கள் தான் நம் எஜமானர்கள். அவர்கள்  வாக்களித்ததாலேயே நாம் இங்கு அமர்ந்திருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தலைவர்கள் பேசும் போது, மிக கவனமாக வார்த்தைகளை விட வேண்டும். ஒருவர் தங்களிடம் வந்து கேள்வி கேட்டால், உடனடியாக பதில் கூற வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. 

நீங்கள் விடும் வார்த்தை எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து பேச வேண்டும். உங்களுக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமின்றி, வாக்களிக்காத ஒட்டுமாெத்த தொகுதி மக்களுக்காகவும் பணியாற்ற வேண்டும். எம்.பி.,க்கள் ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்’’ என பிரதமர் மாேடி பேசினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close