விரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 25 May, 2019 09:40 pm
new-ministers-list-soon-pm-announces-narendra-modi

ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த குடியரசுத் தலைவருக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாகவும், விரைவில் புதிய அமைச்சர்களின் பட்டியல் குடியரசுத் தலைவரிடம் வழங்கப்படும் என்றும் பிரமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதையடுத்து, மத்தியில் ஆட்சி அமைக்க பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்திருந்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  பிரதமர் நரேந்திர மோடி, ‘விரைவில் புதிய அமைச்சர்களின் பட்டியல் குடியரசுத் தலைவரிடம் வழங்கப்படும். ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த குடியரசுத் தலைவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். புதிய அரசு பல்வேறு  நல்ல திட்டங்களை விரைவில் செயல்படுத்தும். அனைவரும் ஒன்றாக இணைந்து புதிய உச்சங்களைத் தொடுவோம்’ என்றார். 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close