பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார் ஜெகன்மோகன் ரெட்டி!

  Newstm Desk   | Last Modified : 26 May, 2019 12:08 pm
y-s-jaganmohan-reddy-pm-modi-meet

ஆந்திர முதல்வராக பதவியேற்கவுள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளார். 

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுடன், ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. இதில், மொத்தமுள்ள 175 தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 151 தொகுதியில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

அவர் வருகிற 30ஆம் தேதி பதவியேற்க உள்ளதை அடுத்து, நேற்று மாலை அம்மாநில ஆளுநர் இ.எல். நரசிம்மனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தொடர்ந்து, ஆந்திராவில் சட்டப்பேரவை கலைக்கப்பட்டதாக ஆளுநர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

இதைத்தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டி, இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்கவுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து இருவரும் அரசியல் நிலவரங்கள் குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பாஜக அபார வெற்றி!

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தனிப்பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவைப்படும் நிலையில், பாஜக தனித்து 303 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது மிகப்பெரிய வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. மொத்தமாக தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை பெற்றுள்ளது. இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைகிறது.

newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close