பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் துணைக் குடியரசுத்தலைவர்!

  Newstm Desk   | Last Modified : 26 May, 2019 02:05 pm
venkaiah-naidu-modi-meet

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அபார வெற்றி பெற்று மத்தியின் மீண்டும் ஆட்சி அமைக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, துணைக்குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 303 தொகுதிகளில் தனித்து வெற்றி பெற்றுள்ளது. தனிப்பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவைப்படும் நிலையில், பாஜக தனித்து 303 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது மிகப்பெரிய வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. மொத்தமாக, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 353 இடங்களை பெற்றுள்ளது. இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைகிறது.

நேற்று நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் நாடாளுமன்ற குழுத் தலைவராக பிரதமர் மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவருக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், துணைக்குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close