நான் யாருக்கும் எதிரி கிடையாது: ஜெகன்மோகன் ரெட்டி

  Newstm Desk   | Last Modified : 26 May, 2019 04:22 pm
i-have-no-enemy-jeganmohan-reddy

தான் யாருக்கு எதிராகவும் செயல்படமாட்டேன் என்றும், மக்களின் பாதுகாவலனாக இருப்பதே தனது கடமை என்றும் ஆந்திர முதல்வராக பதவியேற்கவுள்ள ஜெகன்மோகன் ரெட்டி, டெல்லியில் இன்று பேட்டியளித்துள்ளார்.

ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 175 இடங்களில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 151 தொகுதியில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. 

இதையடுத்து அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் 30-ஆம் தேதி முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்கவுள்ளார்.

இந்த நிலையில், டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த ஜெகன்மோகன் ரெட்டி, பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். 

இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜெகன்மோகன் ரெட்டி, ‘நான் யாருக்கு எதிராகவும் செயல்படமாட்டேன். மக்களின் பாதுகாவலனாக இருப்பதே எனது கடமை. வரும் காலங்களில் ஆந்திர அரசு ஒரு புரட்சிகரமான அரசாக இருக்கும் என்பது உறுதி. அடுத்த ஓராண்டிற்குள்  நாட்டின் முன்மாதிரி  மாநிலமாக ஆந்திராவை மாற்றிக் காட்டுவேன். பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் போதெல்லாம் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவேன்' என்று தெரிவித்துள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close