30-ஆம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி

  முத்து   | Last Modified : 26 May, 2019 05:51 pm
narendra-modi-takes-over-as-pm-on-30th

நரேந்திர மோடி வரும் 30-ஆம் தேதி பிரதமராக பதவியேற்கவுள்ளார் என்று  குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் மாளிகையில் வரும் 30-ஆம் தேதி இரவு 7 மணிக்கு நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கிறார்.  நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையும் பதவியேற்க உள்ளது. பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் சிறிசேன உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.

மக்களவை தேர்தலில் 303 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. 2-ஆவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கவுள்ளார்.


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close