பாஜக 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என்ற போது என்னை கிண்டலடித்தனர்: பிரதமர் நரேந்திர மோடி

  ராஜேஷ்.S   | Last Modified : 26 May, 2019 08:47 pm
when-the-bjp-won-over-300-seats-i-was-joking-at-me-prime-minister-narendra-modi

மக்களவை தேர்தலில் பாஜக 300 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என தெரிவித்தபோது, பலர் தன்னை கிண்டல் செய்ததாகவும், தற்போது அது முறியடிக்கப்பட்டதாகவும் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

அகமதாபாத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் நன்றி அறிவிப்பு  கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘சூரத் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினருக்காக  நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்’ என்றார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ‘இந்த மக்களவை தேர்தலில் பலரின் கணிப்புகள் தோல்வி அடைந்துவிட்டது. 6-ஆவது கட்ட வாக்குப்பதிவுக்கு பிறகு, பாஜக 300 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என நான் கூறியபோது பலர் என்னை கிண்டல் செய்தனர். வலிமையான அரசு அமைய மக்கள் வாக்களித்துள்ளனர். அடுத்த 5 ஆண்டுகள் மிகவும் முக்கியமானது’ என்று பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது உரையை நிறைவு செய்த பிறகு மக்கள் தங்கள் மொபைல் போன்கள் மூலம் ஃப்ளாஷ் லைட் அடித்து தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close