மக்களை நம்பினார்; மகத்தான வெற்றி பெற்றார்: அமித் ஷா உருக்கம்

  Newstm Desk   | Last Modified : 27 May, 2019 01:47 pm
modi-trusted-people-of-varanasi-that-leads-to-his-electoral-win-amit-shah

‛‛மக்களவை தேர்தலில், வாரணாசி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த பின், பா.ஜ., வேட்பாளர் நரேந்திர மாேடி, பிற வேட்பாளர்களைப் போல், பல முறை தொகுதியில் வாக்குசேகரிக்க வரவில்லை. வாரணாசி மக்கள் தனக்கு ஆதரவளிப்பர் என நம்பினார். அந்த நம்பிக்கையே அவரை வெற்றி பெறச் செய்துவிட்டது’’ என, பா.ஜ.,தேசிய தலைவர் அமித் ஷா பேசினார். 

மக்களவை தேர்தல் வெற்றிக்குப் பின், உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில், பா.ஜ., தொண்டர்கள் மத்தியில் அந்த கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா பேசியதாவது: ‛‛பெரும்பாலும், ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர், அந்த தொகுதி மக்களிடம் பல முறை சென்று, தனக்கு வாக்களிக்கும் படி கேட்பார். 

ஆனால், வாரணாசி தொகுதியில் களம் இறங்கிய பா.ஜ., வேட்பாளர் பிரதமர் நரேந்திர மாேடி, அதிக முறை வாக்கு சேகரிக்க இங்கு வரவில்லை. இங்குள்ள பா.ஜ., தொண்டர்களும், அவரை பிற தொகுதிகளில் பிரசாரம் செய்யும்படி கூறினர். இங்குள்ள மக்கள் தனக்கு ஆதரவாக வாக்களிப்பர் என்பதை அவர் நம்பினார். 

பிரதமர் மாேடி மீது மக்களும், மக்கள் மீது மாேடியும் நம்பிக்கை வைத்தனர். அந்த நம்பிக்கையே அவருக்கு மாபெரும் வெற்றியை தேடித் தந்துள்ளது’’ என அவர் பேசினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close