காங்கிரஸ் தோல்வி குறித்து தலைவர் ராகுல் ஆலோசனை

  Newstm Desk   | Last Modified : 27 May, 2019 01:56 pm
congress-president-rahul-discussed-with-gulam-nabi-and-ahamed-patel

மக்களவை தேர்தலில் காங்., கட்சி மீண்டும் படுதோல்வி அடைந்ததை அடுத்து, தோல்விக்கான காரணம் குறித்து, கட்சியின் மூத்த தலைவர்கள், குலாம் நபி ஆசாத், அகமது பேடல் உள்ளிட்டோருடன், கட்சித் தலைவர் ராகுல் முக்கிய ஆலோசனை நடத்தினார். 

நடந்து முடிந்த, 17வது மக்களவை தேர்தலில், காங்கிரஸ் கட்சி, 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சி, 303 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அதில் 6ல் ஒரு பங்கு இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மாேடிக்கு எதிராகவும், பாரதிய ஜனதா தலைவர்களுக்கு எதிராகவும் கடும் பிரசாரம் செய்தும், காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்து, அந்த கட்சியின் தலைவர் ராகுல், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார். 

இதில், கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், சாோனியாவின் அரசியல் ஆலோசகரும், கட்சியின் மூத்த தலைவருமான அமது படேல் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். கட்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த எவ்வகையான வியூகங்கள் வகுக்க வேண்டும் என்பது குறித்தும் அதில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close