யூகங்கள், வதந்திகள் வேண்டாம்: காங்கிரஸ் கோரிக்கை

  ராஜேஷ்.S   | Last Modified : 27 May, 2019 04:23 pm
no-speculations-no-rumors-congress-demand

காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தின் முடிவுகள் பற்றி யூகங்கள், வதந்திகள் வேண்டாம் என்றும், காங்கிரஸ் கட்சிக்கு ஊடகங்கள் உள்ளிட்ட அனைவரும் மதிப்பளிக்க முன்வர வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளார் ரந்தீப் சுர்ஜிவாலா விளக்கம் அளித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் பற்றி தவறான தகவல்கள் பரவி வருவது துரதிர்ஷ்டவசமானது. மக்களவை தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு குறித்து மட்டுமே காரியக் கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தின் முடிவுகள் பற்றி யூகங்கங்கள், வதந்திகள் வேண்டாம். காங்கிரஸ் கட்சிக்கு ஊடகங்கள் உள்ளிட்ட அனைவரும் மதிப்பளிக்க முன்வர வேண்டும். காங்கிரஸில் தேவையான அனைத்து மாற்றங்களையும் செய்ய கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close