காங்கிரசில் வெடித்தது காேஷ்டி பூசல்: மாநில தலைவர் பதவிக்கு வேட்டு?

  விசேஷா   | Last Modified : 27 May, 2019 04:32 pm
kamalnath-vs-scindya-who-will-lead-madhya-pradesh-congress

மக்களவை தேர்தலில், காங்., கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து, பல மாநிலங்களில் அந்த கட்சியில் கோஷ்டி பூசல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. குறிப்பாக, மத்திய பிரதேசத்தில், முதல்வர் கமல்நாத், இளம் தலைவர் ஜாேதிராதித்ய சிந்தியா ஆதரவாளர்களிடையே, பனிப் போர் உச்சத்தை அடைந்துள்ளதால், கமல்நாத்தின் மாநில காங்., தலைவர் பதவி தப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

நாட்டின் 17வது மக்களவை தேர்தலில், காங்கிரஸ் கட்சி, வெறும் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று மிகப் பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி 303 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அதில் 6ல் 1 பங்கு இடங்களில் மட்டுமே காங்கிரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது. 

குறிப்பாக, மிகப் பெரிய மாநிலங்களான, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, பீஹார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் அந்த கட்சி தலா ஓரிடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. குஜராத்தில் அனைத்து இடங்களிலும் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. 

இந்நிலையில், பாரதிய ஜனதாவின் கோட்டையாக விளங்கிய மத்திய பிரதேசத்தில், கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வை 4 தொகுதிகள் கூடுதலாக வெற்றி பெற்று மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றியது. 

அப்போது, இளம் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா மாநில முதல்வராக்கப்படலாம் என கூறப்பட்ட நிலையில், மூத்த தலைவரான கமல்நாத் முதல்வரானார். இது, சிந்தியா ஆதரவளார்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அதே போல், கட்சியின் மாநில தலைவர் பொறுப்பிலிருந்தும் கமல்நாத் விடுவிக்கப்படவில்லை. 

இந்நிலையில், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், ம.பி.,யில் உள்ள, 29 இடங்களில் காங்கிரஸ் கட்சி 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, கமல்நாத் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும், அப்போது தான் மாநிலத்தில் பா.ஜ., ஆட்சியை கைப்பற்றுவதை தடுக்க முடியும் என்றும், சிந்தியா ஆதரவாளர்கள் கோஷமிட துவங்கியுள்ளனர். 

கமல்நாத் ஒன்று முதல்வர் பதவியை சிந்தியாவுக்கு விட்டுத் தர வேண்டும். இல்லையென்றால், மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சிந்தியாவை அதில் அமர வைக்க வேண்டும். இரண்டில் ஏதேனும் ஒன்று நடக்காவிட்டால், கமல்நாத்துக்கு எதிராக பாேராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, சிந்தியா ஆதரவாளர்கள் அறிவித்துள்ளனர். இதற்கு கமல்நாத் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால், ம.பி.,யில் காங்கிரஸ் கோஷ்டி மாேதல் உச்சத்தை அடைந்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close