உத்தரப் பிரதேசம் : கணிப்பைவிட அதிக இடங்களை கைப்பற்றிய பாஜக!

  Newstm Desk   | Last Modified : 27 May, 2019 06:24 pm
election2019-uttarpradesh-newstm-prediction-final-results

நாட்டிலேயே அதிகமாக, 80 மக்களவைத் தொகுதிகளை கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில், பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி -பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி என மும்முனை போட்டி நிலவியது.

இதில் பாஜக - 44 இடங்களையும், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கூட்டணி - 32 தொகுதிகளையும் கைப்பற்றும். காங்கிரஸ் கட்சி வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும். இதேபோன்று அப்னா தளம் கட்சி  2 தொகுதிகளை கைப்பற்றும் எனவும் Newstm கணித்திருந்தது.

ஆனால் அங்கு பாஜக 62 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம், இதன் கூட்டணி கட்சியான அப்னா தள், நியூஸ்டிஎம் கணித்ததை போலவே 2 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.  பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கூட்டணி 32 இடங்களில் வெற்றிப் பெறும் என கணித்த நிலையில், இக்கூட்டணி 15 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் ஒரேயொரு இடத்தில் மட்டும் ஆறுதல் வெற்றி கண்டுள்ளது.

தரவு உதவி : திரு. சுந்தரம்.நாகராஜன், 

(Psephologist), "NMUSSK" Media And Data Analytics.

இன்ஃபோகிராஃபிக்ஸ் உதவி : எஸ்.சந்திரசேகர் (Data Analyst)

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close