நரேந்திர மோடி பதவியேற்பு விழா: BIMSTEC தலைவர்களுக்கு அழைப்பு

  Newstm Desk   | Last Modified : 27 May, 2019 07:55 pm
bimstec-leaders-to-attend-modi-s-swearing-in

மே 30-ஆம் தேதி நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க BIMSTEC தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  

மக்களவை தேர்தலில் 303 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இதைத்தொடர்ந்து, மே 30-ஆம் தேதி 2-ஆவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

இந்த நிலையில், நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க BIMSTEC தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. BIMSTEC-ல் உறுப்பினர்களாக உள்ள வங்கதேசம், பூடான், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2014-ஆம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற விழாவில் SAARC அமைப்பு தலைவர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அழைப்பு விடுக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close