வீர் சாவர்க்கர் ஜெயந்தி: பிரதமர் மோடியின் புகழ் அஞ்சலி!

  Newstm Desk   | Last Modified : 28 May, 2019 12:33 pm
pm-narendra-modi-pays-homage-to-veer-savarkar

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் விநாயக் தாமோதர் வீர் சாவர்க்கரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, அவரை நினைவு கூர்ந்து, ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

வீர் சாவர்க்கர் ஒரு சமூக சீர்திருத்தவாதி, தீண்டாமையை ஒழிக்க பாடுபட்டவர்; இந்து மகாசபையை உருவாக்கியவர்; சுதந்திரப் போராட்ட வரலாற்றில், ஆங்கிலேயரால் 50ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றவர்; மிகக்கொடூரமான அந்தமான் சிறையில் காலத்தை கழித்தவர். 

வீர் சாவர்க்கர் எழுதிய 'இந்திய சுதந்திரப் போராட்டம்-1857' எனும் நூல் வெளிவரும் முன்பே தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இன்று வீர் சாவர்க்கரின் பிறந்த தினத்தை முன்னிட்டு,  பிரதமர் நரேந்திர மோடி, அவரை நினைவு கூர்ந்து ட்வீட் செய்துள்ளார். அவர் தனது ட்விட்டர்  பக்கத்தில், "இந்நாளில் வீர் சாவர்க்கருக்கு தலைவணங்குகிறோம். அவருடைய தைரியம், தேச பக்தி, நாட்டிற்கான அவரது அர்ப்பணிப்பு, வலிமைமிக்க இந்தியாவை உருவாக்க பாடுபட்டமையை இன்று ன் நினைவு கூர்கிறோம். அவருடைய சரித்திரம் இந்திய மக்களுக்கு ஒரு உந்துதலாக இருந்துள்ளது. அவரது வழியில் இந்தியாவை வலிமைப்படுத்துவோம்" என்று பதிவிட்டுள்ளார்.  

மேலும், அவரது திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்துவது போன்ற ஒரு வீடியோவையும் தனது பதிவில் இணைத்துள்ளார். 

 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close