ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் திடீர் தாவல்: ஆட்சிக்கு ஆபத்து? 

  Newstm Desk   | Last Modified : 28 May, 2019 05:04 pm
trinamol-congress-mla-s-joins-bjp-threat-for-mamata-government

மேற்கு வங்கத்தை ஆளும் திரிணமுல் காங்கிரசை சேர்ந்த, 2 எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., ஒருவர் என, மூன்று எம்.எல்.ஏ.,க்கள் இன்று, தங்கள் கட்சிகளிலிருந்து விலகி, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர். எம்.எல்.ஏ.,க்கள் அணி மாறுவது தொடர்ந்தால், அந்த மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. 

மேற்கு வங்க மாநிலத்தில், திரிணமுல் காங்கிரசை சேர்ந்த மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில் பன்னெடுங்காலமாக ஆட்சிக் கட்டிலை அலங்கரித்த கம்யூனிஸ்ட்டுகள் தற்போது இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது. காங்கிரஸ் கட்சியைப் பற்றி எதுவும் சொல்வதற்கில்லை. 

இதனால், மாநிலத்தில், வலுவான எதிர்க்கட்சியே இல்லாத நிலை உருவானது. மாநில மக்கள் நலன் கருதி, மம்தா தலைமையிலான அரசு பல நலத்திட்டங்களை அறிமுகம் செய்தாலும், இரண்டாம் கட்ட அரசியல் தலைவர்களால், அவை சரியாக மக்களுக்குப் போய் சேர்வதில்லை என்ற புகார் நிலவுகிறது.

தவிர, ரவுடியிசம், குண்டர்கள் ராஜ்ஜியம், கட்டப்பஞ்சாயத்து, கொலை மிரட்டல் விடுத்தல், ஆள் கடத்தல், கொலை செய்தல் உள்ளிட்ட பல கிரிமினல் குற்றங்களில், அந்த கட்சியினர் ஈடுபட்டு வந்தனர். இதனால், மக்கள் மத்தியில் திரிணமுல் காங்கிரசின் செல்வாக்கு மெல்ல மெல்ல சரியத்துவங்கியுள்ளது. 

இதற்கிடையே, சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், மாநிலத்தில் மாெத்தமுள்ள 42 இடங்களில், 19 இடங்களை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றியது. கடந்த முறை, 34 இடங்களில் வெற்றி பெற்ற திரிணமுல் காங்கிரஸ், இம்முறை 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 

இந்த தோல்வி, மம்தாவுக்கு விழுந்த மரண அடியாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய பிரதமர் நரேந்திர மாேடி, தேர்தல் முடிவுகளுக்குப் பின், மாநில அரசியலில் மிகப் பெரிய மாற்றம் நிகழும் என்றார். அவரின் வாக்கு பலிப்பது போல், திரிணமுல் காங்கிரசை சேர்ந்த, இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் அந்த கட்சியிலிருந்து விலகி, பாரதிய ஜனதா கட்சியின் இணைந்தனர். 

அது தவிர, 50 க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் திரிணமுல் காங்கிரசிலிருந்து விலகி, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, எம்.எல்.ஏ., ஒருவரும், பாரதிய ஜனதாவில் இணைந்தார். இன்னும் பல எம்.எல்.ஏ.,க்கள் அணி மாறும் எண்ணத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் பல ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அணி மாறும் பட்சத்தில், மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா தலைமையிலான அரசு எந்த நேரத்திலும் கவிழ்க்கப்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close