எம்.பி.,பதவியை ராஜினாமா செய்தார் கனிமாெழி

  Newstm Desk   | Last Modified : 29 May, 2019 02:07 pm
kanomozhi-amit-sha-and-ravishankar-prasad-resigns-rajyasabah-mp-post

சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், தமிழகத்தின் துாத்துக்குடி தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழி, இன்று ராஜ்யசபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். 

நாட்டின், 17வது மக்களவை தேர்தலில், திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமாெழி, துாத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் களம் கண்டார். அவரை எதிர்த்து, பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட்டார். இந்த தேர்தலில், கனிமாெழி வெற்றி பெற்றார். 

மக்களவை உறுப்பினராக தேர்வானதை அடுத்து, கனிமாெழி தன் ராஜ்யசபா எம்.பி.,பதவியை இன்று ராஜினாமா செய்தார். அவரைப் போலவே, மக்களவைக்கு தேர்வாகியுள்ள பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா, பா.ஜ.,வை சேர்ந்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோரும், தங்கள் ராஜ்யசபா எம்.பி.,பதவியை ராஜினாமா செய்துள்ளனர். 
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close