கூட்டணியில் கடும் குழப்பம்: முதல்வர் பதவிக்கு ஆபத்து?

  Newstm Desk   | Last Modified : 29 May, 2019 02:46 pm
karnataka-cm-discuss-with-congress-leaders

கர்நாடகாவில், ஆளும் மதசார்பற்ற ஜனதாதளம் - காங்கிரஸ் கூட்டணியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளதால், முதல்வர் குமாரசாமியின் பதவி தப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

கர்நாடகாவில், 105 எம்.எல்.ஏ.,க்களை வைத்துள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு, ஆட்சி அமைக்க தேவையான அளவு எம்.எல்.ஏ.,க்கள் பலம் இல்லாததால், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது. அதே சமயம், 37 இடங்களில் வெற்றி பெற்ற மஜத தலைவர் குமாரசாமி, 79 காங்., எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவுடன், முதல்வர் பதவியில் அமர்ந்துள்ளார். 

இரு கட்சிகளும் கூட்டணி ஆட்சி செய்து வந்தாலும், அவர்களிடையே அடிக்கடி அதிகாரப் போட்டி நடைபெற்று வருகிறது. அதே சமயம், பாரதிய ஜனதா கட்சியும் ஆட்சியை பிடிப்பதற்கான பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், மக்களவை தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து, மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல் நிலவுகிறது. 

எனினும், ஆட்சியை எப்படியும் தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியில் இரு கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், கர்நாடக முதல்வர் குமாரசாமி, காங்., தலைவர்கள், அமைச்சர்கள், முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டத்தில், முக்கிய முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

குமாரசாமியை முதல்வர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, காங்., கட்சியை சேர்ந்த ஒருவரை முதல்வராக்கும் முயற்சியில் காங்., தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்படி எதுவும் நடந்தால், பா.ஜ.,வுக்கு ஆதரவளிக்கும் மனநிலையில் குமாரசாமி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், அந்த மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close