பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியை புறக்கணிக்கும் முதல்வர்

  Newstm Desk   | Last Modified : 29 May, 2019 04:25 pm
kerala-cmo-chief-minister-pinarayi-vijayan-will-not-attend-prime-minister-narendra-modi-s-oath-taking-ceremony-on-may-30th

பிரதமர் நரேந்திர மாேடி மீண்டும் பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. 

மக்களவை தேர்தலில் பா.ஜ., கூட்டணி பிரம்மாண்ட வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் நரேந்திர மாேடி, தொடர்ந்து இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமர் பொறுப்பேற்க உள்ளார். அதற்கான பதவியேற்பு நிகழ்ச்சி, டெல்லியில் நாளை நடைபெறவுள்ளது. 

இந்நிலையில், புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் படி, மாநில முதல்வர்கள், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், வி.ஐ.பி.,க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவரும், கேரள மாநில முதல்வருமான பினராயி விஜயன், நாளைய நிகழ்ச்சியில் பங்கேற்கமாட்டார் என, முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

இதன் மூலம், பிரதமர் நரேந்திர மாேடியின் பதவியேற்பு நிகழ்ச்சியை பினராயி விஜயன் புறக்கணிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close