2 வது முறையாக நாட்டின் பிரதமர் ஆனார் நரேந்திர மாேடி!

  Newstm Desk   | Last Modified : 30 May, 2019 07:17 pm
modi-become-pm-of-india-2nd-consicutive-time

2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, முதல்முறையாக நாட்டின் பிரதமர் பொறுப்பேற்ற நரேந்திர மாேடி, இன்று 2வது முறையாக நாட்டின் பிரதமராக பொறுப்பெற்றார். 

நடந்த முடிந்த மக்களவை தேர்தலில், மொத்தமுள்ள, 542 தொகுதிகளில், பாரதிய ஜனதா கட்சி, 303 இடங்களில் தனித்து வெற்றி பெற்றது. அதன் கூட்டணியுடன் சேர்த்து, 353 இடங்களில் வெற்றி பெற்றது. 

இதையடுத்து நடைபெற்ற, பாரதிய ஜனதா கட்சி மற்றும் தே.ஜ., கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில், அந்த கூட்டணியில் எம்.பி.,க்கள் குழு தலைவராக, நரேந்திர மாேடி ஒருமனதாக தேர்வானார். 

இதை தொடர்ந்து டெல்லியில் இன்று மாலை நடைபெற்று வரும் பதவியேற்பு நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மாேடி, தொடர்ந்து 2வது முறையாக மீண்டும் பிரதமராக பதவியேற்றார். 

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த நிகழய்ச்சியில், பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள், நம் நாட்டை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close