தேர்தலில் ராகுலை வென்ற ஸ்மிருதிக்கு மீண்டும் அமைச்சர் பதவி

  Newstm Desk   | Last Modified : 30 May, 2019 07:50 pm
smriti-irani-becomes-again-central-minster

மக்களவை தேர்தலில் காங்., தலைவர் ராகுல் போட்டியிட்ட அமேதி தொகுதியில், அவருக்கு எதிராக களம் கண்டு வெற்றி பெற்ற மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு புதிய அமைச்சரவையில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், காங்., தலைவர் ராகுலை எதிர்த்து பா.ஜ., சார்பில் ஸ்மிருதி இரானி போட்டியிட்டார். சினிமா பின்னணியை உடைய அவர், ராகுலுக்கு எதிராக களம் காண்பதா என, காங்கிரசார் கிண்டல் செய்தனர். அதற்கு ஏற்றார் போலவே, அமேதி தொகுதியில், அவரால் ராகுலை தோற்கடிக்க முடியவில்லை.

எனினும், மத்தியில் பா.ஜ., தலைமையிலான ஆட்சி அமைந்த போது, ஸ்மிருதி இரானி ராஜ்யசபா எம்.பி.,யானார். அவருக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக பொறுப்பு வழங்கப்பட்டது. ஸ்மிருதியின் கல்வித் தகுதியை ஒப்பிட்டு அவரை கிண்டல் செய்த எதிர்க்கட்சிகள், அவரின் கல்வித் தகுதி குறித்து சர்ச்சை எழுப்பி வந்தன. 

இதையடுத்து, அவர் மத்திய ஜவுளித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் அமேதியில் களப்பணியாற்றி, மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றை நிறைவேற்றினார். 

2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே, அமேதியில் இம்முறை எப்படியும் தோல்விதான் என்பதை அறிந்த ராகுல், வெற்றி பெறுவதற்கு எளிமையான தொகுதியான கேரள மாநிலம் வயநாட்டிலும் போட்டியிட்டார். 

சொல்லி வைத்தார் போல், 2019 தேர்தலில், ராகுலை விட, 55 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று அமேதி தொகுதி எம்.பி.,யாக தேர்வானார். ராகுலை வென்ற ஸ்மிருதிக்கு எப்படியும் இம்முறை அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 

அதே போல், இன்று நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சியில், ஸ்மிருதி இரானியும் மத்திய அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு முக்கிய இலாகா ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close