மகன் பிரதமர் ஆனதை டி.வி.,யில் பார்த்து ரசித்த தாய்!

  Newstm Desk   | Last Modified : 30 May, 2019 08:20 pm
heeraben-modi-mother-of-pm-narendra-modi-watching-the-swearing-in-ceremony

பிரதமர் நரேந்திர மாேடி தாெடர்ந்து 2வது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்றதை, டி.வி.,யில் பார்த்து, கைத்தட்டி மகிழ்ந்தார் அவரது தாய் ஹீராபென் மாேடி. 

மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் நரேந்திர மாேடி, 2 வது முறையாக நாட்டின் பிரதமராக இன்று பதவியேற்றார். அவருடன் அவரது அமைச்சரவை சகாக்களும் பதவியேற்றனர். பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த தலைவர்கள், உள்நாட்டு தலைவர்கள், வி.ஐ.பி.,க்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மாேடியின் தாய் ஹீராபென் மோடி, தன் மகன் நாட்டின் பிரதமராக பதவியேற்றதை, அகமதாபாத்தில் உள்ள வீட்டில் டி.வி.,யில் கண்டு ரசித்தார். தன் மகன் நாட்டின் பிரதமராக தொடர்ந்து 2வது முறையாக பதவியேற்றதை கண்டு மகிழ்ச்சி அடைந்த ஹீராபென், கைத்தட்டி ஆராவாரம் செய்து மகிழ்ந்தார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close