வீர வணக்கத்திற்குப் பின் ராணுவ அமைச்சர் பொறுப்பேற்கிறார் ராஜ்நாத் சிங்

  Newstm Desk   | Last Modified : 31 May, 2019 11:26 pm
rajnath-will-go-to-war-memorial-before-taking-charge-as-defence-minister

டெல்லியில் உள்ள போர் வீரர்கள் நினைவகத்திற்குச் சென்று, நாட்டை காக்கும் பணியில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்திய பின், அலுவலகம் சென்று, ராணுவ அமைச்சர் பொறுப்பை ஏற்க உள்ளார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங். 

மக்களவை தேர்தலில், லக்னோ தொகுதியில் இருந்து தேர்வான ராஜ்நாத் சிங், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங், இம்முறை, ராணுவம் உள்ளிட்ட முப்படைகளை கவனிக்கும் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். 

இந்நிலையில், நாளை காலை, பாதுகாப்பு அமைச்சக அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்க உள்ள ராஜ்நாத் சிங், அதற்கு முன், டெல்லியில் உள்ள வார் மெமோரியல் எனப்படும், போர் வீரர்கள் நினைவகத்திற்கு சென்று, நாட்டை காக்கும் பணியில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்த உள்ளார். அதன், முறைப்படி பாதுகாப்பு அமைச்சக பணிகளை மேற்கொள்ள உள்ளார். 

newstm.in

 

 

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close