தமிழக மங்கை இந்திய நிதியமைச்சரானார்!

  Newstm Desk   | Last Modified : 31 May, 2019 11:59 pm
nirmala-is-the-women-finance-minister-after-indra-gandhi

முன்னாள் பிரதமர் இந்திராவுக்குப் பின், நாட்டின் முதல் பெண் ராணுவ அமைச்சர் என்ற பெருமையை பெற்ற, தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமன், தற்போது, அதே போல், மத்திய நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். 

தமிழகத்தின் மதுரையை பூர்வீகமாக கொண்டவர், நிர்மலா சீதாராமன். திருச்சியில் கல்லுாரி படிப்பை முடித்த இவர், வெளிநாட்டிலும் மேற்படிப்பு படித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த நபரை திருமணம் செய்த அவர், பா.ஜ.,வில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வந்தார். 

அவரின் துடிப்பான செயல்பாடுகளால், கட்சியில் மட்டுமின்றி, பிரதமர் நரேந்திர மாேடி தலைமையிலான ஆட்சியிலும் முன்னேற்றம் கண்டுள்ளார். கடந்த முறை, ராணுவ அமைச்சராக இருந்த நிர்மலா, இம்முறை, மத்திய நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். 

முன்னாள் பிரதமர் இந்திரா பிரதமராக இருந்த காலத்தில், ராணுவம், நிதித்துறையை தன் வசம் வைத்திருநு்தார். அவரே நாட்டின் முதல் பெண் ராணுவ, நிதி அமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்நிலையில், இந்திராவுக்கு அடுத்தபடியாக பெண் இந்த பொறுப்புகளை பெற்ற பெண், நிர்மலா என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close