பிரகாஷ் ஜாவடேகர், பாபுல் சுப்ரியோ அமைச்சர்களாக பதவியேற்பு

  Newstm Desk   | Last Modified : 01 Jun, 2019 01:48 pm
prakash-javadekar-take-charge-as-central-minister

பா.ஜ.,வை சேர்ந்த, பிரகாஷ் ஜாவடேகர் மற்றும் பாபுல் சுப்ரியோ ஆகியோர், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர்களாக இன்று பொறுப்பேற்றனர். 

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.,யான பிரகாஷ் ஜாவடேகர், பிரதமர் நரேந்திர மாேடி தலைமையிலான முந்நதைய அரசில், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கான தனிபொறுப்புடன் கூடிய இணையமைச்சராக பொறுப்பேற்றார். அதன் பின், அவரிடம் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்ச பொறுப்பு வழங்கப்பட்டது. 

இந்நிலையில், மத்தியில் பொறுப்பேற்றுள்ள பிரதமர் நரேந்திர மாேடி தலைமையிலான புதிய அரசில், பிரகாஷ் ஜாவடேகர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலம் அன்சோல் தொகுதியில் போட்டியிட்டு வென்ற பிரபல நடிகர் பாபுல் சுப்ரியாே இதே துறையின் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுமள்ளார். 
இவர்கள் இருவரும், தங்கள் அமைச்சரவை பொறுப்பை நேற்று ஏற்றுக் கொண்டனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close