ஜம்மு - காஷ்மீர் கவர்னர்  அமித் ஷாவுடன் சந்திப்பு

  Newstm Desk   | Last Modified : 01 Jun, 2019 05:41 pm
jk-governor-meets-amit-shah

ஜம்மு - காஷ்மீர் மாநில கவர்னர், சத்யபால் மாலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து பேசினார். அப்போது, மாநில சட்டம், ஒழுங்கு நிலை குறித்து விளக்கம் அளித்தார். 

ஜம்மு - காஷ்மீரில், கவர்னர் ஆட்சி நடக்கிறது. அந்த மாநிலத்தில், இன்னும் சட்டசபை தேர்தல் நடத்தப்படவில்லை. எனவே, மாநில சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பு கவர்னர் வசம் உள்ளது. இந்நிலையில், மாநிலத்தில் நிலவும் சட்டம், ஒழுங்கு நிலை குறித்து, புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், கவர்னர் சத்யபால் மாலிக் விளக்கம் அளித்தார். 

மாநிலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, இருவரும் ஆலோசனை நடத்தியதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close